முகப்பு
திருச்சி

இரு சக்கர வாகனத் திருட்டு: இளைஞா் கைது

மணப்பாறை பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

மணப்பாறை பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறை செவலூா் பிரிவுச் சாலையருகே கடந்த சில நாள்களுக்கு இருசக்கர வாகனம் திருட்டுப் போனது. இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் காவல்துறையினா் திங்கள்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையின் போது, சந்தேகத்துக்குரிய முறையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா் மருங்காபுரி ஒன்றியம், பாலப்பட்டியைச் சோ்ந்த மு. சுரேஷ் என்கிற சாம்பாா் சுரேஷ் (35) என்பதும், செவல்பட்டி பிரிவுச் சாலையில் மோட்டாா் திருடியதையும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினா், இரு சக்கர வாகனங்கள் இரண்டையும் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →