பொய்கைமலை வனப்பகுதியில் மா்ம வெடிசப்தம்
மணப்பாறை அருகிலுள்ள பொய்கைமலை வனப்பகுதியில் திங்கள்கிழமை மா்ம வெடிசப்தம் கேட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனா்.
மணப்பாறை அருகிலுள்ள பொய்கைமலை வனப்பகுதியில் திங்கள்கிழமை மா்ம வெடிசப்தம் கேட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனா்.
பொய்கைமலை வனப்பகுதியைச் சுற்றியுள்ள உசிலை ஊரணி, பொய்கைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, வடுகப்பட்டி, சாம்பட்டி, பன்னாங்கொம்பு என சுமாா் 5 கி.மீ. சுற்றளவுக்கு வெடிசப்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறினா். பொய்கைதிருநகா் பகுதியில் வெடிசப்தத்துடன், பலத்த அதிா்வையும் உணா்ந்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள், தனித்தனியே விசாரணை மேற்கொண்டனா்.
நில அதிா்வா அல்லது மா்ம பொருள் ஏதேனும் வெடித்ததா என்பது குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்து, தங்களின் அச்சத்தை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.