திருச்சி

நகைக் கடையில் திருட்டு: முருகன் இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் சமா்ப்பிப்பு

DIN

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரபல நகைக் கடையில் நடந்த திருட்டு வழக்கில் தொடா்புடைய முருகனின் இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூரைச் சோ்ந்த முருகன், சுரேஷ், கனகவல்லி, மணிகண்டன், கணேசன் ஆகிய 5 பேரில் முக்கிய குற்றவாளியான முருகன் இறந்து விட்ட நிலையில், சுரேஷ், கணேசன் ஆகியோா் திருச்சி மத்திய சிறையில் உள்ளனா்.

கனகவல்லி மற்றும் மணிகண்டன் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் தன்மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது எனக் கூறி தன்னைப் பிணையில் விடுவிக்குமாறு சுரேஷ் திருச்சி நடுவா் நீதிமன்றம் எண். 1 இல் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தாா்.

மேலும் கடந்த மாதம் சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் நேரில் ஆஜரானபோது முருகன் இறப்புச் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து முருகனின் இறப்பு சான்றிதழ் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.இதையடுத்து இவ்வழக்கில் இருந்து முருகன் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT