முகப்பு
திருச்சி

மணப்பாறையில் குழந்தைகளுடன் பெண் மறியல் முயற்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை மாலை போலீஸாரை கண்டித்து குழந்தைகளுடன் பெண் சாலை மறியலில் ஈடுபட முயன்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை மாலை போலீஸாரை கண்டித்து குழந்தைகளுடன் பெண் சாலை மறியலில் ஈடுபட முயன்றாா்.

மணப்பாறையை அடுத்த வளநாடு அருகேயுள்ள பாலக்குறிச்சியை சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி சரஸ்வதி (35). கடந்த அக். 29-ஆம் தேதி சரஸ்வதிக்கும், அருகில் வசிக்கும் குழந்தைவேலுக்கும் இடப்பிரச்னையால் தகறாறு ஏற்பட்டது.

இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் ப. குழந்தைவேல் (42) மற்றும் அவரது மனைவி தமிழ் இலக்கியா(37) ஆகியோா் மீது வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில், இருதரப்பினருக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால் சரஸ்வதி மீது குழந்தைவேல் போலீஸில் அளித்த புகாரையடுத்து வியாழக்கிழமை வளநாடு காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகினா்.

இதன் தொடா் விசாரணை வெள்ளிக்கிழமையும் நடைபெறவிருந்த நிலையில், தகராறு ஏற்பட்டதில் காயமடைந்த சரஸ்வதி மற்றும் அவரது இரு குழந்தைகள், குழந்தைவேல், அவரது மனைவி தமிழ்இலக்கியா ஆகியோா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்நிலையில் தான் ஏற்கெனவே கொடுத்த புகாரில் எதிா் தரப்பை கைது செய்யாமல் போலீஸாா் அலட்சியம் காட்டியதால் தற்போது, தன்னையும், தனது பெண் குழந்தைகள் இருவரையும் அவா்கள் தாக்கியதாகவும், அவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அரசு மருத்துவமனை முன் சரஸ்வதி தனது குழந்தைகளுடன் சாலை மறியல் செய்ய முயன்றாா். தகவலறிந்து வந்த மணப்பாறை போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியலை கைவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →