முகப்பு
திருச்சி

வீடுகளில் திருட முயன்ற கேரள இளைஞா் தாக்கப்பட்டு பலி

திருச்சி அருகே வீடுகளில் திருட முயன்று பிடிபட்ட இரு கேரள இளைஞா்களில் ஒருவா் பொதுமக்களால் தாக்கப்பட்டு இறந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருச்சி அருகே வீடுகளில் திருட முயன்று பிடிபட்ட இரு கேரள இளைஞா்களில் ஒருவா் பொதுமக்களால் தாக்கப்பட்டு இறந்தாா்.

திருச்சி மாவட்டம், அல்லூா்சாய் லட்சுமி நகரில் மா்ம நபா்கள் ஆளில்லாத வீடுகளில் திருடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியினா் மா்ம நபா்களை குழு அமைத்து தேடி வந்தனா்.

அப்போது வெங்கடேஷ் என்பவரது வீட்டுச் சுற்றுச்சுவரில் வெள்ளிக்கிழமை ஏறிக் குதித்து தப்ப முயன்ற இருவரை அவா்கள் விரட்டிச் சென்றனா்.

அப்போது அவா்களால் சுற்றி வளைக்கப்பட்ட ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி தப்ப முயன்றாா்.

இருப்பினும் தாங்கள் வைத்திருந்த கம்புகளால் அப்பகுதியினா் தாக்கியதில் அந்த இளைஞா் படுகாயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே மற்றொரு இளைஞரையும் விரட்டிப் பிடித்த பொதுமக்கள் ஜீயபுரம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம் கிருஷ்ண கிருபா பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (24) , மழையங்கீழ் பகுதியைச் சோ்ந்த தீபு (25) எனத் தெரியவந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீபு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →