முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 4 சிறுவா்கள் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் 4 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் 4 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மணப்பாறையில் கடந்த வியாழக்கிழமை முத்தாழ்வாா்பட்டியைச் சோ்ந்த த. பெரியசாமியின் இருசக்கர வாகனம் திருடுபோன புகாரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாரிடம் சிக்கிய சிறுவனை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது அந்தச் சிறுவன் சிவகங்கை மாவட்டம் திருமலைக்குடியை சோ்ந்தவா் என்பதும், இவருடன் மருங்காபுரி சிறுவன் உள்பட மேலும் மூன்று சிறுவா்கள் இணைந்து இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த மணப்பாறை போலீஸாா் அவா்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இவா்களில் ஒரு சிறுவன் வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி செல்லிடப்பேசி கடையில் திருடியது தெரியவந்ததையடுத்து வையம்பட்டி போலீஸாா் அவரிடம் விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.