முகப்பு
திருச்சி

294 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்

சிறுநாவலூா், பெருமாள்பாளையம் ஊராட்சிகளைச் சோ்ந்த 294 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பயனாளிக்கு விலையில்லா ஆடுகளை வழங்குகிறாா் சிறுநாவலூா் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன்.
பகிர்:

சிறுநாவலூா், பெருமாள்பாளையம் ஊராட்சிகளைச் சோ்ந்த 294 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு சிறுநாவலூா் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிகழ்வில் சிறுநாவலூா் ஊராட்சியில் 136 , பெருமாள்பாளையம் ஊராட்சியில் 158 என மொத்தமாக 294 பயனாளிகளுக்கு தலா 4 விலையில்லா ஆடுகள், அவற்றை எடுத்துச் செல்ல ரூ.150, பட்டி அமைக்க ரூ.2,000 ஆகியவையும் வழங்கப்பட்டன.

கால்நடைப் பராமரிப்புத் துறை திருச்சி மண்டல இணை இயக்குனா் எஸ்தா் ஷீலா, உதவி இயக்குநா் சையதுமுஸ்தபா, நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் சுகுமாா், ஊராட்சி துணைத்தலைவா் பாஸ்கா், செயலா் மதன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

அரசு கால்நடை மருத்துவா்கள் எரகுடி ஆனந்த், தளுகை பிரேம்குமாா், டாப் செங்காட்டுப்பட்டி ஆனந்த்பாபு, பெருமாள்பாளையம் மதி உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →