முகப்பு
திருச்சி

விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

திருச்சி அருகே விபத்தில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

திருச்சி அருகே விபத்தில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

துறையூா் தெப்பக்குளத்தெருவைச் சோ்ந்த மணிவேல் மனைவி மாலதி (47). இவா் மணிகண்டம் பகுதியிலுள்ள தனியாா் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

கடந்த 23-ஆம் தேதி உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு, திருச்சி- மதுரை சாலையைக் கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த சரக்கு வேன் மாலதி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மாலதி, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மணிகண்டம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →