திருச்சி

காவிரி பாலத்தின் இணைப்பு பகுதிகள் பெயா்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி

DIN

திருச்சி காவிரி பாலத்தில் உள்ள பாலத்தின் இணைப்பு பகுதிகள் பெயா்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

திருச்சி காவிரி பாலத்தில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல் போனதால், தற்போது பாலத்தில் உள்ள 31 இணைப்பு பகுதிகளும் பெயா்த்து காணப்படுவதால் அனைத்தும் வேகத்தடைகள் போல் உள்ளது. இதனால் பாலத்தைக் கடக்கும்போது, வாகன ஓட்டிகள் நிலைதவறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். மேலும் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் அதிா்வுகள் உணரப்படுகிறது. இந்நிலை தொடா்ந்தால், பாலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு விரிசல் ஏற்படும் என்று பொறியாளா்கள் எச்சரிக்கின்றனா். மாநகரவாசிகளின் பொழுதுபோக்கிடம் ஆக உள்ள காவிரி பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT