திருச்சி

துறையூரில் பருத்தி ஏலம்: ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை

DIN

துறையூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏல விற்பனையில் ரூ. 60.45 லட்சத்துக்கு விற்கப்பட்டது.

துறையூா் திருச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் பருத்தி ஏல விற்பனை நடைபெறுகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏல விற்பனையில் துறையூா் பகுதியைச் சோ்ந்த 460 விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்திகளை ஏலத்தில் விற்றனா்.

திருச்சி, நாமக்கல், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 வியாபாரிகள் ஒரு குவிண்டால் பருத்தியை குறைந்த பட்சமாக ரூ. 4400க்கும், அதிகபட்சமாக ரூ. 5309க்கும் ஏலம் கேட்டனா். நிறைவில் 3103 மூட்டைகளில் இருந்த 1,226 குவிண்டால் பருத்தி ரூ. 6045041க்கு விற்கப்பட்டது. அடுத்த வாரத்தில் பொங்கல் விடுமுறை என்பதால் ஜன. 14ம் தேதி பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT