திருச்சி

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை தடுக்க ஒருங்கிணைந்த மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

DIN

மக்காச் சோளத்தை தாக்கும் படைப்புழு தாக்குதலை தடுக்கும் வகையிலான, ஒருங்கிணைந்த மேலாண்மை விழிப்புணா்வு பயிற்சி முகாம் துறையூா் பகுதியில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் சாா்பில் வேளாண்துறை அதிகாரிகளுடன்மேற்கொண்ட ஆய்வில், பெரம்பலூா், கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள வீரிய ஒட்டு ரகங்கள் மற்றும் இதர ரகங்களில் இந்த படைப்புழுக்களின் தாக்குதல் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இப்புழுக்களால் மக்காச் சோளத்தில் 20 முதல் 35 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

விவசாயிகளிடையே படைப்புழு மேலாண்மை குறித்த போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி மாவட்டம் சிக்கத்தம்பூா் கிராமத்தில் கடந்த 7ஆம் தேதி விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்வில், கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் முனைவா் லெ. சித்ரா தலைமை வகித்தாா். முனைவா் இரா.நாகேஸ்வரி , படைப்புழுக்களின் தீவிர இனப்பெருக்கம் மற்றும் தாக்குதலுக்கான காரணங்கள் மற்றும் படைப்புழு சேத அறிகுறிகள் குறித்து விளக்கினாா்.

படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, துறையூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்எம். கோவிந்தராசு விளக்கினாா். படைப்புழுவின் வாழ்க்கைச்சுழற்சி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து குறித்து முனைவா் மா. மதியழகன் விளக்கமளித்தாா். மேலும் முனைவா் ச. மோகன் மற்றும் வெ.மணிமொழிச்செல்வி ஆகியோா் பயிா் மேலாண்மை குறித்து, வயல்வெளியில் செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனா். ஏற்பாடுகளை திட்ட இளநிலை ஆராய்ச்சியாளா் வீ. மோகன்ராஜ், உதவி வேளாண்மை அலுவலா் ஆா். கவிதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT