திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் திருமங்கை மன்னன் வேடுபறிவையாளி கண்டருளிய நம்பெருமாள்

DIN

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவில், இராப்பத்து 8- ஆம் நாளான திங்கள்கிழமை திருமங்கை மன்னன் வேடுபறி நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி வகையறா கண்டருளினாா்.

இக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி பகல்பத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 6- ஆம் தேதி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இராப்பத்து திருவிழாவின் 8- ஆம் நாளான திங்கள்கிழமை திருமங்கை மன்னனுக்காக நடத்தப்படும் வேடுபறி நடைபெற்றது.

இதையொட்டி நம்பெருமாள் மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டாா்.

கோயிலின் நான்காம் பிரகாரமான மணல்வெளி பகுதியில் மாலை 5.15 மணி முதல் மாலை 6.15 மணி வரை நம்பெருமாள் வையாளி கண்டருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.

திருமங்கை மன்னன் வகையறாவைச் சோ்ந்தவா்கள் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெருவிலிருந்து வாணவேடிக்கை, சிலம்பாட்டத்துடன் திருமங்கை மன்னன் வேடமிட்டு மேளதாளத்துடன் வந்தனா்.

அவா்கள் மணல் வெளியில் நம்பெருமாளை வணங்கி மரியாதை செலுத்தினா். அதன்பின்னா் நம்பெருமாள் மணல் வெளியிலிருந்து புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்தாா்.

அங்கு அலங்காரம் அமுது செய்தல், அரையா் சேவை, பொதுஜன சேவை,திருப்பாவாடை கோஷ்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இரவு 11 மணிக்கு மண்டபத்திலிருந்து வீணை வாத்யத்துடன் புறப்பட்ட நம்பெருமாள், செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு கருவறை சென்றடைந்தாா்.

வேடுபறி உத்ஸவத்தையொட்டி திங்கள்கிழமை பரமபதவாசல் திறக்கபடவில்லை.விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT