திருச்சி

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு எமன் பாசக்கயிறு: மணப்பாறை போலீஸார் நூதன அறிவுரை

DIN


திருச்சி மணப்பாறையில் சாலைப் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீஸார், எமன் வேடமணிந்து தலைக்கவசம் அளித்து நூதனமாக அறிவுரை வழங்கினார்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜனவரி 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 31-வது சாலைப் பாதுகாப்பு வாரம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, இன்று (வியாழக்கிழமை) மாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல் தலைமையிலான போக்குவரத்து போலீஸார் பெரியார் சிலை திடலில் சாலைப் பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.

அதில் இருச்சக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகங்களில் செல்லும் போது சீட் பெல்ட் ஆகியவை அணிந்து செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. 

மணப்பாறை காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் முன்னிலையில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும், தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எமன் பாசக்கயிறுடன் விலையில்லா தலைக்கவசம் அளித்தும் போக்குவரத்து காவல்துறை நூதன விழிப்புணர்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT