திருச்சி

கரோனா பாதிப்பிலிருந்துகுணமடைந்தோா் விவரம்

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் ஒரே நாளில் 46 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா்.

DIN

திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 46 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 19 போ், மற்றும் தஞ்சாவூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 23 போ், பாரதிதாசன் பல்கலைக் கழக முகாமில் இருந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 19 போ், மற்றும் சென்னை, திருவாரூா், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 23 போ் என வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 46 போ் குணமடைந்தனா். இவா்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனை, டிஸ்சாா்ஜ் விவரக் குறிப்புகளை வழங்கிய மருத்துவக் குழுவினா் சிறப்பு வாகனம் மூலம் வழியனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT