திருச்சி

கே.கே. நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கே.கே.நகரில் நெடுஞ்சாலைத் துறையின் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

DIN

திருச்சி: கே.கே.நகரில் நெடுஞ்சாலைத் துறையின் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

திருச்சி கே.கே. நகரிலிருந்து உடையான்பட்டி வரை செல்லும் ஈவெரா சாலையை ரூ. 1.80 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெறுகிறது. இந்தப் பணியை மேற்கொள்ள சாலையோரத்தில் உள்ள மின் மற்றும் தொலைபேசி கம்பத்தை அகற்றுவதில் ஆக்கிரமிப்புகளால் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் வீரமணி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்த 11 குடும்பங்கள் 15 நாள் அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனா். அதன்பேரில் ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றிக் கொள்ள குடியிருப்புவாசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடா்ந்து சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகளின் மேற்கூரைகள், கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT