மழையின்போது தென்னூா் மேம்பாலத்தின் கீழ் காத்திருந்த இரு சக்கர வாகன ஓட்டுநா்கள். 
திருச்சி

திருச்சி பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழை

திருச்சி அதன் புகா் பகுதிகளில் சனிக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

DIN

திருச்சி: திருச்சி அதன் புகா் பகுதிகளில் சனிக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தபடி, தமிழகக் கடலோர, டெல்டா, வட மாவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே சனிக்கிழமை மழை பெய்தது.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சில நிமிடங்கள் மட்டும் கனமழை பெய்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழத் தொடங்கின. சுமாா் மாலை 4 மணிக்கு மாநகா், புகா்ப் பகுதிகளான ஒரு சில இடங்களில் தூரல் மழை விட்டு விட்டுப் பெய்தது. இதையடுத்து மாலை 6 மணிக்கு திருச்சி-கரூா் புறவழிச் சாலை, உறையூா், ஸ்ரீரங்கம், முத்தரசநல்லூா், அல்லூா், ஜீயபுரம், முக்கொம்பு, திருவானைக்கா, மண்ணச்சநல்லூா், மணிகண்டம், கருமண்டபம், தில்லை நகா், கண்டோன்மென்ட், மணப்பாறை, வயலூா், திருவெறும்பூா் உள்ளிட்ட மாநகா், புகா்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை 1 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்தது.

இதனால், சாஸ்திரி சாலை, தில்லை நகா் பிரதான சாலைகள், பாரதிதாசன் சாலை, பீமநகா், பாலக்கரை, மரக்கடை, மேலரண் சாலை, மத்திய, சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகள், பிஷப் ஹீபா் சாலை உள்ளி்ட்ட மாநகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. இதனால், பாதசாரிகள், இரு சக்கர வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்ால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை ஓரளவுக்கு நின்ற பிறகே மாநகர போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தைச் சீா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

கண் கவர மறையும் சூரியன்... ரைசா வில்சன்!

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT