முகப்பு
திருச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
உறையூா் குறத்தெரு பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

திருச்சி1: திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி உறையூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். சிவா தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் ஏ.கே. திராவிடமணி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ், மாதா் சங்க க. ஆயிஷா, வை. புஷ்பம், அறிவுக்கரசி, மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் க. இப்ராகிம் உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வாா்டில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு தரமான உணவு, குடிநீா், படுக்கை, மருந்து, பராமரிப்பு உள்ளிட்டவை தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் மற்றும் உறையூா் பகுதி பொதுமக்கள் பலா் முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →