திருச்சி

மணப்பாறை அருகே டிராக்டர் கலப்பையில் சிக்கி 10ஆம் வகுப்பு மாணவன் பலி 

DIN

மணப்பாறை அருகே பண்ணை தோட்டத்தில் நிலம் உழும் பணியில் இருந்த டிராக்டர் கலப்பையில் சிக்கி 10ஆம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் துரைக்கண்ணு. அதே பகுதியில் உள்ள தனியார் பண்ணை தோட்டத்தில் துரைக்கண்ணு இரவு பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணிக்காக பண்ணை தோட்டத்திற்கு சென்ற துரைக்கண்ணுடன் அவரது 15 வயது இளைய மகன் மூவேந்திரன் (எ) சிவா-வும் சென்றுள்ளான். காலையில் தோட்டத்தில் டிராக்டர் மூலம் நிலம் உழும் பணி நடைபெற்றிருக்கிறது. 

இதை சிறுவன் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தானாம். சிறுவன் ஓடிக்கொண்டிருந்த டிராக்டரின் பின்பகுதியில் ஏற முற்பட்டதாகவும், அப்போது டிராக்டர் கலப்பையில் சிக்கி மண்ணோடு அடிப்பட்டு கிடந்ததாகவும் கூறப்படுகிறது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என டிராக்டர் ஓட்டுனர் தேடியபோது சிறுவன் டிராக்டர் கலப்பையில் சிக்கி தலையில் அடிபட்டி இரத்தவெள்ளத்தில் மண்ணில் கிடந்தது தெரியவந்தது. 

அதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுவன் உடல் உடற்கூராய்விற்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT