திருச்சி

திருச்சியில் 70% உணவகங்கள் செயல்படத் தொடங்கின

DIN

பொது முடக்கத்தால் தமிழகத்தில் மூடப்பட்ட உணவகங்கள் கடந்த மே மாதம் முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்காமல் பார்சல் மட்டுமே வழங்கும் வகையில் அனுமதிக்கப்பட்டது. 

ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் மேலும் சில தேர்வுகள் அறிவிக்கப்பட்டு புதிய வழிக்காட்டுதல்கள் படி ஜூன் 8 ஆம் தேதி முதல் செயல்படலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

திங்கள்கிழமை அதிகாலையிலிருந்தே திருச்சி மாவட்டத்தில் உள்ள 70 சதவீத உணவகங்கள் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு படிப்படியாக திறக்கப்பட்டன. 

பெரும்பாலான கடைகளில் குறைவான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு சமூக இடைவெளியுடன் காலை உணவு பரிமாறப்பட்டது. அதேபோல முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

 முன்னதாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி திரவம் கொண்டு நன்கு கை கழுவ அறிவுறுத்தப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த 30 சதவீதம் உணவகங்கள் திறக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT