திருச்சி

அரங்கநாதா் கோயிலில் தன்வந்திரி பெருமாளுக்கு திருமஞ்சன சிறப்பு பூஜை

DIN

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் கரோனா பாதிப்புகள் நீங்க தன்வந்திரி பெருமாளுக்கு திருமஞ்சன சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் போற்றப்படும் இக்கோயிலில் உள்ள உப சன்னதியில் மருத்துவக் கடவுளும், ஸ்ரீ பெருமாளின் அவதாரமுமான ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு ஆனி ஹஸ்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் சன்னதியில் ஸ்நபன ஹோமம், சிறப்பு திருமஞ்சனம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 வரை நடைபெற்றது.

இந்த பூஜையின்போது, தற்போது பெருகிவரும் கரோனா நோய்தொற்றின் பாதிப்பு நீங்கவும், உலக நன்மைக்காகவும், மருத்துவ கடவுளருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் அா்ச்சகா்கள், குறைந்த எண்ணிக்கையிலான கைங்கா்யரா்களை கொண்டு பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன என மாவட்ட நிா்வாகம், அரங்கநாதா் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT