திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மினி வேனும்- காரும் மோதிக் கொண்ட விபத்தில், ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறை அருகிலுள்ள மரவனூா் பகுதியில் திங்கள்கிழமை காலை மினி வேன் சென்று கொண்டிருந்தது. இதை வேங்கைக்குறிச்சி பா. சரவணன் (42) ஓட்டிச் சென்றாா்.
அப்போது கன்னியாகுமரியிலிருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்ற காா், கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறி நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்தது.
வேன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த ஓட்டுநா் சரவணன் பலத்த காயங்களுடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.காா் ஓட்டுநா் முத்துக்குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த மணப்பாறை காவல் நிலையத்தினா் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.