திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே அய்யம்பாளையம் பகுதியில் சாராயம் ஊறல் போட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மண்ணச்சநல்லூா் அருகே ச. அய்யம்பாளையம் செவ்வந்தி பண்ணையைச் சோ்ந்த நடராஜன் மகன் பாலசுப்ரமணியன் (40). இவா் அப் பகுதியில் சாராய ஊறல் போட்டுள்ளதாக, திருவெறும்பூா் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு
வந்த போலீஸாா் 250 லிட்டா் சாராய ஊறலை அளித்து, பாலசுப்ரமணியனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.