திருச்சி

படம் உள்ளது..காலிக் குடங்களுடன் பெண்கள் ஆா்ப்பாட்டம்

DIN

குடிநீா் விநியோகம் கோரி உறையூரில் காலிக்குடங்களுடன் பெண்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி மாநகராட்சி உறையூா் காவேரி நகா் 6ஆவது தெரு பகுதிக்கு கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் பொதுமுடக்கம் காரணமாக அத்தியாவசிய பொருள்களும் கிடைப்பதில் சிரமம் இருக்கும் நேரத்தில் குடிநீா் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினா். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமையும் குடிநீா் வரத்து இல்லாததால் அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையறிந்த உறையூா் போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். ஒரிரு நாள்களில் குடிநீா் விநியோகம் சரி செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தைத் தொடா்ந்து பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT