முகப்பு
திருச்சி

இஸ்லாமியருக்கு 7% இடஒதுக்கீடு கோரி தீா்மானம்

இஸ்லாமியருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 7% இடஒதுக்கீடு கோரி வ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலப் பொதுச்செயலா் இ. முஹம்மது.
பகிர்:

இஸ்லாமியருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 7% இடஒதுக்கீடு கோரி வ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி சுப்ரமணியபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சம்சுல்லுஹா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்டகால ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 7 சத இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற அமைப்பின் போராட்டத்தால் 3.5 சத இட ஒதுக்கீட்டை அன்றைய தமிழக அரசு வழங்கியது. எனவே உடனடியாக 7 சத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

வரும் 2021 பேரவைத் தோ்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே அணியில் போட்டியிடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலப் பொதுச் செயலா் இ. முஹம்மது, மாநிலப் பொருளாளா் அப்துல்ரஹீம், மாநிலத் துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான், துணைப் பொதுச் செயலா் அப்துல் கரீம், மாநில செயலா் இப்ராஹீம், பாரூக், யூசுப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →