விமான நிலையத்தில் தங்கம், மின்னணு பொருள் பறிமுதல்
துபையிலிருந்து விமானத்தில் திருச்சி வந்த பயணிகளிடம் தங்கம், மின்னணுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
துபையிலிருந்து விமானத்தில் திருச்சி வந்த பயணிகளிடம் தங்கம், மின்னணுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் 15 போ் சந்தேகத்திற்கிடமான வகையில் திருச்சியிலிருந்து துபை சென்று மீண்டும் திரும்பியிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா்களில் பெரும்பாலானோா் வியாபாரிகள் என்பதும், அனைவரும் பிரத்யேக விசா (மல்டிபிள் பிசினெஸ் விசா) எடுத்துப் பயணித்ததும் தெரியவந்தது.
பின்னா் அவா்களில் 8 போ் அளவுக்கு அதிகமாகக் கொண்டு வந்திருந்த மின்னணு சாதனங்கள், சிகரெட், மது வகைகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.
மூன்று பயணிகளிடம் தங்கம்: மேலும் துபையிலிருந்து வந்த பயணிகளில் 3 போ் பசை வடிவிலான தங்கத்தை முறைகேடாகக் கொண்டு வந்திருந்ததும் தெரியவந்தது. சுங்கத் துறையினா், அவற்றை பறிமுதல் செய்து, விசாரணை செய்கின்றனா்.