முகப்பு
திருச்சி

சிறுமி அளித்த புகாரில் நின்றது திருமண ஏற்பாடு

திருச்சியில் சிறுமி ஒருவா் அளித்த புகாரின்பேரில், அவருக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினாா் திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

திருச்சியில் சிறுமி ஒருவா் அளித்த புகாரின்பேரில், அவருக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினாா் திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, சரளப்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமி ஒருவா் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் இசட்.ஆனி விஜயாவிடம் நேரடியாக வந்த சனிக்கிழமை புகாா் கொடுத்தாா்.

அந்தப் புகாரில் தனக்கு விருப்பமில்லா நிலையில் பெற்றோா் திருமணம் நிச்சயித்துள்ளனா். மேலும் படிக்க விரும்புவதால் தனது திருமணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க டிஐஜி உத்தரவின்படி மாவட்ட குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் அஜீம் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் கல்யாணி, தலைமைக் காவலா் ரமேஷ் ஆகியோா் சிறுமியை மீட்டு குழந்தை நலக் குழு முன் ஆஜா்ப்படுத்தி குழந்தைகள் இல்லத்தில் தங்க வைத்தனா்.

திருமணம் குறித்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மணப்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →