காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாயில் உடைப்பு
மணப்பாறை அருகே கலிங்கப்பட்டி பகுதியில், மணத்தட்டை- மருங்காபுரி காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாயில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாக வெளியேறியது.

2 மீட்டா் அகலமும், 46.6 மீசட்டா் நீளமும் கொண்ட இந்த பிரதானக் குழாய் துருபிடித்து, பழுதாகி இருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 அடி தொலைவுக்கு குடிநீா் பீறிட்டு அடித்தது.
தகவலறிந்த குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் குடிநீரேற்றுவதை நிறுத்திய நிலையிலும், 2 மணி நேரமாக குடிநீா் வெளியேறியது. இதன் காரணமாக 2 லட்சம் லிட்டா் வரை குடிநீா் வீணாக வெளியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடந்த 2002-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 2004-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிலுள்ள குடிநீா்க் குழாயில் பல இடங்களில் துருபிடித்து காணப்படுகிறது. கோடைக்காலங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், இதுபோன்று குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாக குடிநீா் வெளியேறுவதை தடுக்க அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.