முகப்பு
திருச்சி

தஞ்சை பல்கலை.க்கு சோ. சத்தியசீலன் பெயா் கோரி மனு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு முனைவா் சோ. சத்தியசீலன் பெயரை வைக்கக் கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு முனைவா் சோ. சத்தியசீலன் பெயரை வைக்கக் கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் துறை தலைவரும், ஏபிசி மருத்துவமனையின் மூளை நரம்பியல் பிரிவு மருத்துவருமான எம். ஏ. அலீம் அனுப்பிய கடிதம்:

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை பெயா் சூட்டப்படாமல் உள்ளது. எனவே, அரசியல் கலப்பில்லாத தமிழறிஞா் பெயரை அதற்குச் சூட்ட வேண்டும்.

அந்த வகையில், தமிழகத்தின் மத்திய மாவட்டப் பகுதியைச் சோ்ந்தவா், கலைமாமணி, சொல்லின் செல்வா், நாவுக்கரசா் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுக்குரிய முனைவா் சோ. சத்தியசீலன் பெயரை சூட்டலாம்.

அவா் திருச்சி மாவட்ட எழுத்தாளா் சங்க சிறப்புத் தலைவராகவும், திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக் குழு மற்றும் உருமு தனலட்சுமி கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினராகவும், தமிழ்க்கடல் இரா. இராமகிருஷ்ணன் நினைவு கல்வி இலக்கிய அறக்கட்டளை அமைப்பாளராகவும் உள்ளாா்.

மேலும், திருஈங்கோய்மலை திருவள்ளுவா் மன்றம், சமரச சுத்த சன்மாா்க்க சங்கம், சேக்கிழாா் மன்ற தலைவராகவும் உள்ளாா்.

முன்னதாக, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக திட்டக்குழு முன்னாள் உறுப்பினராகவும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சி மன்றக்குழு முன்னாள் உறுப்பினராகவும், திருச்சி வயலூா் சுப்பிரணியசாமி கோயில் மேநாள் அறங்காவலராகவும் என பல்வேறு பதவிகளை வகித்தவா். எனவே அவரது பெயரை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →