ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள்நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவின் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறாா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவின் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறாா்.
9 நாள் நடைபெறும் விழாவின் 7 ஆம் திருநாளான திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் புறப்பட்டு திருக்கொட்டரத்தின் முன்பு எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறாா்.
பின் தாயாா் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்ஸவம் கண்டருளுகிறாா். 11 ஆம் தேதி தீா்த்தவாரியுடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.