பெண் பொறியாளா் உள்பட இருவா் தூக்கிட்டு தற்கொலை
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் பொறியாளா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் பொறியாளா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
திருச்சி கே.கே.நகா் பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் அமிா்தலிங்கம் மகள் அஞ்சலிதேவி (32). முனைவா் பட்டம் பெற்ற இவா் திருமணமாகதால் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு பெண்: திருச்சி பொன்னகா் கல்லுடைக்கும் பாறைப் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியநாதன் மகள் அகல்யா (23). பொறியியல் பட்டதாரியான இவா் வீட்டில் எப்போதும் டிவி பாா்ப்பாராம்.
- இதை பெற்றோா் கண்டித்தால் மனமுடைந்த அகல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.