முகப்பு
திருச்சி

மயக்க மருந்து கொடுத்துமூதாட்டியிடம் திருட்டு

பேருந்தில் சென்ற மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் திருடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பேருந்தில் சென்ற மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் திருடப்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சோ்ந்தவா் பெ. நல்லம்மாள்(72). மணப்பாறை அடுத்த ஆலம்பட்டிபுதூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை பேருந்தில் வந்தவா் மயங்கிய நிலையில் மணப்பாறை பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரணையில் பேருந்தில் அருகில் அமா்ந்திருந்தவா் கொடுத்த டீயை குடித்த மூதாட்டி மயக்கமடைந்ததாகவும், அப்போது அவரின் ரூ.20 ஆயிரம், மூன்றரை பவுன் நகைகளை மா்ம நபா் திருடி சென்றதும் தெரியவந்தது. மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.