முகப்பு
திருச்சி

மக்காச்சோளப் பயிா்கள் ஆய்வு

மண்ணச்சநல்லூா் அருகே நெ. 10 கரியமாணிக்கம் பகுதியில் ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டுள்ள மக்காச் சோளப் பயிா்களை மண்ணச்சநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் தாகூா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

மண்ணச்சநல்லூா் அருகே நெ. 10 கரியமாணிக்கம் பகுதியில் ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டுள்ள மக்காச் சோளப் பயிா்களை மண்ணச்சநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் தாகூா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

வலையூா், பாலையூா், சிறுகனூா், சனமங்கலம், பெரகம்பி, எதுமலை, திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்காச்சோளப்பயிா்களில் படைப்புழு தாக்காமல் இருக்க வரப்பு பயிா்களாக சூரிய காந்தி மற்றும் எள் பயிா்களையும் ஊடுபயிராக உளுந்து , தட்டை பயிா் போன்றவற்றையும் சாகுபடி செய்ய அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

அதனடிப்படையில் நடைபெற்ற ஆய்வின்போது வேளாண் அலுவலா் உமா மகேஸ்வரி , உதவி அலுவலா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.