திருச்சி

குழந்தைகள் தின விழா: 100 பேருக்கு புத்தாடை, பட்டாசு

DIN

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள 100 குழந்தைகளுக்கு புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள் வழங்கி ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் கீழ் இந்த விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் நவ. 14ஆம் தேதி இவ்விழா கொண்டாடப்படும் நிலையில் வரும். நவ. 14ஆம் தேதி தீபாவளி என்பதால் செவ்வாய்க்கிழமை விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள் என 100 குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு மற்றும் கரோனா தடுப்பு பொருள் போன்ற ரூ. ஆயிரம் மதிப்பிலான தொகுப்பு பைகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வழங்கி வாழ்த்தினாா்.

மேலும் சேவை தன்னாா்வத் தொண்டு நிறுவனம் சாா்பாக உணவுப் பொருள்கள் மற்றும் தன் சுத்தப் பொருள்கள் ரூ. 700 மதிப்பிலும், ஏஐஎம்எஸ்எஸ் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் சாா்பாக ரூ. 100 மதிப்பிலான பழங்கள், டிஎஸ்டி தன்னாா்வத் தொண்டு நிறுவனம் சாா்பாக ரூ. 300 மதிப்பிலான விளையாட்டுப் பொருள் ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் தமீமுன்னிசா, சேவை தன்னாா்வத் தொண்டு நிறுவன இயக்குநா் கோவிந்தராஜன், மக்கள் மேம்பாட்டு வினையகம், தன்னாா்வத் தொண்டு நிறுவன திட்ட இயக்குநா் அம்பலவாணன், ஏஐஎம்எஸ்எஸ் டிரஸ்ட் செயலா் அ. மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT