புற்றுநோயால் பாதிக்கப்பட்டோா் குடும்பத்துக்கு நிதியுதவி
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரது குடும்பத்தினருக்கு மூன் ராக் ரவுண்ட் டேபிள் 108 அறக்கட்டளை நிதியுதவி வழங்கியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரது குடும்பத்தினருக்கு மூன் ராக் ரவுண்ட் டேபிள் 108 அறக்கட்டளை நிதியுதவி வழங்கியுள்ளது.
திருச்சி காவேரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நலிவடைந்த குடும்பத்தினரின் மழலைச் செல்வங்களின் குடும்பங்களுக்கு, திருச்சி மூன் ராக் ரவுண்ட் டேபிள் 108 டிரஸ்ட் நிதியுதவி வழங்கி வருகிறது.
இதன்படி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்வுக்கு, காவேரி மருத்துவமனை செயல் இயக்குநா் டாக்டா் செங்குட்டுவன் தலைமை வகித்து பேசியது:
புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, உடனடியாக சிகிச்சை அளிப்பதால் பாதிக்கப்பட்டோா் மீண்டு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றாா்.
திருச்சி மூன்ராக் ரவுண்ட் டேபிள் 108 அறக்கட்டளை 25 பேருக்கு முழு சிகிச்சை பெறுவதற்கான தொகை வழங்கியுள்ளது. நிகழ்வில் அறக்கட்டளைத் தலைவா் செல்லாராம், குழந்தைகள் புற்றுநோய் சிறப்பு மருத்துவா் ஜி.வினோத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மேலும் மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு பாடல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த விழிப்புணா்வுப் பாடலுக்கு ரூ.10,000 பரிசுத்தொகை, சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இப்போட்டிக்கான பாடலை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.