சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த லாமின் யமால்!
சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த லாமின் யமால் குறித்து...
பார்சிலோனா வீரர் லாமின் யமால், சாம்பியன்ஸ் லீக்கில் குறைந்த வயதில் (18 ஆண்டுகள், 240 நாள்கள்) 10 கோல்களை அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தற்போது ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் கிளியன் எம்பாபே குறைந்த வயதில் (18 ஆண்டுகள், 350 நாள்கள்) 10 கோல்கள் அடித்தவராக இருந்தார். தற்போது, இவரது சாதனை லாமின் யமாலால் முறியடிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் நியூகேஸிலுக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா 7-2 என அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரஃபீனியா தனது பெனால்டி வாய்ப்பை லாமின் யமாலுக்கு வழங்கினார்.
Advertisement
Advertisement
முதல் பாதியின் கடைசி நிமிஷத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பில் லாமின் யமால் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம், கிளியன் எம்பாபே சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
காலிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா அணி அத்லெடிகோ மாட்ரிட் உடன் மோதவிருக்கிறது. ஸ்பானிஷ் கோப்பையில் பார்சிலோனா அணி அரையிறுதியில் அத்லெடிகோவிடம் தோற்றது. இந்தத் தோல்விக்கு பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
The youngest player ever to score 10 Champions League goals, Lamine Yamal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.