FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய விளையாட்டு: வரலாற்றுச் சாதனை படைத்த ஜே மீனா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய வீரர் ஜே மீனா குறித்து...

23 செப்டம்பர் 2026, 5:13 pm IST
வரலாற்றுச் சாதனை படைத்த ஜே மீனா - படம்: எக்ஸ் / சாய் மீடியா
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் ஜே மீனா சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் வீரர் டகுயா குரோசகா உடன் தோல்வியுற்று வெண்கலம் பதக்கத்துடன் ஆசிய போட்டியில் இருந்து ஜே மீனா வெளியேறினார். தங்கம் வெல்லா விட்டாலும் முதல் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மூன்றாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபெறும் ஜே மீனா (26 வயது) மூன்று கேம்களில் பின்னடைவை சந்தித்தாலும் அடுத்தடுத்த கேம்களில் கம்பேக் அளித்தார்.

Advertisement

Advertisement

நான்காவது ஐந்தாவது கேமை வென்ற மீனா ஆறாவது கேமில் கோட்டை விட்டார். இருப்பினும் அவரது 45 நிமிஷ போராட்டத்துக்குப் பிறகு இறுதியில் 2-4 (3-5, 1-4, 1-4, 4-1, 6-4, 1-4) என தோல்வியுற்றார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜே மீனா 2022 தேசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். முதலிரண்டு போட்டிகளில் அசத்திய மீனா, ஜப்பான் வீரரிடம் சிறிய தவறுகளால் தோல்வியுற்றார்.

குரோசகா விடாப்பிடியாக விளையாடி 4-2 என இறுதிப் போட்டியில் இடம் பிடித்தார். முன்னதாக மீனா பிலிப்பின்ஸ் வீரரை 4-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

summary

Asian Games 2026 Jay Meena claims historic bronze medal for India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments