FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய விளையாட்டு: இறுதிக்கு முன்னேறிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறித்து...

22 செப்டம்பர் 2026, 6:41 pm IST
ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக் - படம்: எக்ஸ் / சாய் மீடியா
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக் (31 வயது) வால்ட் (கை ஊன்றித் தாண்டுதல்) பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒரேயொரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணதி நாயக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களின் அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல் இறுதிக்கு முன்னேறி நம்பிக்கை அளித்துள்ளார்.

பிரணதி நாயக் இதுவரை ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்பில் மூன்று முறை வெண்கலம் வென்றுள்ளார். மொத்தமாக 19 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் பிரணதி நாயக் 7ஆவது இடம் பிடித்து இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Advertisement

Advertisement

முதல் வாய்ப்பில் பிரணதி 13.000 புள்ளிகளும் (டி பிரிவில் 4.4 புள்ளிகளும் இ பிரிவில் 8.600 புள்ளிகளும்) இரண்டாவது வாய்ப்பில் 12.433 புள்ளிகளும் (டி பிரிவில் 4.0 புள்ளிகளும் இ பிரிவில் 8.433 புள்ளிகளும்) பெற்றார்.

போனஸாக 0.20 புள்ளிகள் கிடைத்ததால், சராசரியாக பிரணதி நாயக் 12. 916 புள்ளிகளைப் பெற்று எழாவது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தப் பிரிவில் 14. 466 புள்ளிகளுடன் யோ சியோ-ஜியோங் முதலிடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணதி நாயக் இறுதிப் போட்டியில் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

summary

Pranati Nayak qualifies for vault finals in Asian Games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments