FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்க வீராங்கனை வித்யா ராம்ராஜைப் பாராட்டிய தனுஷ்!

நடிகர் தனுஷ் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜைச் சந்தித்துள்ளார்...

நடிகர் தனுஷ் வீராங்கனை வித்யா ராம்ராஜ்
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜை நடிகர் தனுஷ் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

கோவையை சோ்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் இறுதி நேரத்தில் அபாரமாக ஓடி தங்கம் வெல்லும் இந்தியாவின் கனவை நனவாக்கினாா். தொடா்ந்து, கலப்பு 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். மேலும், 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா்.

சாதனைப் படைத்த வித்யா ராமராஜ் கோவை திரும்பியதும் பத்திரிகையாளர்களிடம், “சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் 2023 -ஆம் ஆண்டுமுதல் கடுமையாக உழைத்தேன். பதக்கத்தை இலக்காகக் கொள்ளாமல், நேரத்தை மேம்படுத்துவதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. அடுத்ததாக ஒலிம்பிக் போட்டியில் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளேன். ஒலிம்பிக் போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பாா்கள் என்பதால், அதற்காகத் தீவிரப் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.” என்றார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் தனுஷ் வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட வித்யா, “உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி தனுஷ் சார். நீங்கள் கொடுத்த உத்வேகத்திற்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

Dhanush personally invited and congratulated Vithya Ramraj, who won a gold medal at the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments