FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய விளையாட்டில் ஹாட்ரிக் பதக்க வாய்ப்பை உறுதிசெய்த ரோஷிபினா தேவி!

இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி ஆசிய விளையாட்டுப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து...

22 செப்டம்பர் 2026, 5:53 pm IST
ரோஷிபினா தேவி - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வூஷூ காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், ரோஷிபினா தேவி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதிசெய்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கியது. இதில் வூஷூ பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவி காலிறுதியில் வென்றுள்ளார்.

Advertisement

Advertisement

வூஷூ பிரிவில் 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற ரோஷிபினா தேவி (25 வயது) மக்காவு நாட்டைச் சேர்ந்த சு மான் சின்னை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.

முன்னதாக ஆசிய விளையாட்டில் ரோஷிபினா தேவி வெள்ளி (2023) மற்றும் வெண்கல (2018) பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

மற்றுமொரு இந்திய வீராங்கனை ஹன்ஜாபம் லாங்லென்டோம்பி தேவி ஒன்பதாவது இடம்பிடித்து வெளியேறினார்.

summary

Roshibina Devi enters semifinals in wushu at Asian Games, ensures medal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments