FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கம் வெல்ல அரிய வாய்ப்பு..! ஆதிக்கத்துடன் இறுதிக்கு முன்னேறிய ரோஷிபினா தேவி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி குறித்து...

23 செப்டம்பர் 2026, 6:57 pm IST
இந்திய வீராங்கனை ரோஷிபினா - படங்கள்: பிடிஐ
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வுஷூ அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி (25 வயது) வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், ரோஷிபினா தேவி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதிசெய்துள்ளார்.

மகளிருக்கான வுஷூ 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவியும் இந்தோனேஷியாவின் தானியா குசுமானிங்டியாஸும் மோதினார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் முதலிரண்டு சுற்றுகளிலும் ரோஷிபினா தேவி வென்று 2-0 என இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6.10 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

இந்தப் போட்டியை சோனி லைவ் தொலைக்காட்சி, செயலியில் பார்வையிடலாம். முன்னதாக ஆசிய விளையாட்டில் ரோஷிபினா தேவி வெள்ளி (2023) மற்றும் வெண்கல (2018) பதக்கங்களை வென்றுள்ளார்.

தற்போது, ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதிலும் தங்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

Asian games 2026: Into the gold medal bout Roshibina Devi delivers a dominant 2–0 win in SemiFinals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments