இந்தியாவுக்கு 34ஆவது பதக்கம்: 2 சென்டி மீட்டரில் தங்கப் பதக்கத்தை இழந்த ஆன்சி சோஜன்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். வெறுமனே 2 சென்டி மீட்டர் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் பங்கேற்று, 6.53 மீட்டருக்கு தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Advertisement
Advertisement
சீன வீராங்கனை ஹுவாங் யிங்கியிங் 6.55 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். முதலிரண்டு இரண்டு இடங்களுக்கு இடையேயான வித்தியாசம் 2 சென்டி மீட்டர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு சீன வீராங்கனை மெனங்கி டன் 6.46 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலம் வென்றார். கேரளத்தில் பிறந்த ஆன்சி சோஜனுக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது ஆசிய விளையாட்டுப் பதக்கமாகும். முன்னதாக 2022ல் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
25 வயதான ஆன்சி சோஜன் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். ஆசிய விளையாட்டில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இத்துடன் இந்தியாவுக்கு 34 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் அதில் 4 தங்கம், 15 வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். குத்துச் சண்டையில் மூன்று பதக்கங்கள் உறுதியாகி இருப்பதும் கவனிக்கத்தக்கது.
Asian Games 2026: Silver for Ancy Sojan! India's Long Jump Star Falls Just 2cm Short Of Gold In Thrilling Final
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.