ஆசிய விளையாட்டு: வூஷூ போட்டியில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரோஷிபினா!
ஆசிய விளையாட்டு வூஷூ போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா வெள்ளிப்பதக்கம் வென்றதைப் பற்றி...
ஆசிய விளையாட்டு வூஷூ போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20-வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கான 60 கிலோ வூஷூ இறுதிப்போட்டி வியாழக்கிழமை (செப். 24) காலை நடைபெற்றது. இந்தப் போட்டியில் சீன வீராங்கனை ஜாங் சியாயுயிடம் போராடி தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி.
Advertisement
Advertisement
இரண்டு சுற்றுகளிலும் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சீன வீராங்கனை ஜாங் சியாயு மொத்தத்தில் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தையும், 2-ஆவது இடத்தை பிடித்த ரோஷிபினா வெள்ளிப்பதக்கத்தையும் தன்வசப்படுத்தினர்.
தங்கத்தைத் தவறவிட்டிருந்தாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்ற வூஷூ வீராங்கனை என்ற பெருமையையும் ரோஷிபினா பெற்றுள்ளார்.
மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ரோஷிபினா தேவிக்கு 2023 ஆம் ஆண்டில் விளையாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Indian wushu sensation Roshibina Devi Naorem has clinched a silver medal in the women's 60kg sanda event at the Asian Games, marking her third podium finish at the prestigious continental competition.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.