ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு வெள்ளி வென்றது குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் இன்று (செப். 21) வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோன்று இதே பிரிவில் மற்றொரு வீரர் ருத்ராக்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கியது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் மூன்றாவது நாளான இன்று, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் 12 ஷாட்கள் விளையாடி, 126.6 புள்ளிகளை எடுத்தார். மற்றொரு வீரர் ருத்ராக்ஷ் பாட்டீல் 127.4 புள்ளிகளை எடுத்து முன்னிலை வகித்தார்.
Advertisement
Advertisement
எனினும் அடுத்தடுத்த சுற்றுகளில் இருவரும் புள்ளிகளை எடுப்பதில் சற்றி தடுமாறினர். இறுதிச்சுற்றில் ருத்ராக்ஷ் 22 ஷாட்களுக்கு 230.9 புள்ளிகளைப் பெற்றார். ஹிமான்சு 231 புள்ளிகளைப் பெற்றார். 0.1 புள்ளி வித்தியாசத்தில் ருத்ராக்ஷ் வெள்ளிப் பதக்கத்தை தவறவிட்டார்.
சீன வீரர் ஷேங் லியாவோ முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு அடுத்தபடியாக இருந்த ஹிமான்சு தில்லான் வெள்ளிப் பதக்கமும், ருத்ராக்ஷ் பாட்டீல் வெண்கலமும் வென்றனர்.
Asian Games 2026: Himanshu Dhillon wins silver, Rudrankksh Patil bags bronze in men's 10m air rifle final
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.