ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இந்தியா ஆடவர் அணி!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய ஆடவர் வெள்ளி வென்றது குறித்து...
ஆசியப் விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய ஆடவர் வெள்ளி வென்று இன்று (செப். 21) அசத்தியுள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கியது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் மூன்றாவது நாளான இன்று, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், இந்தியா சார்பில் ஹிமான்சு தில்லான், பார்த் மானே, ருத்ராக்ஷ் பாட்டீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய மூவர் அணி 1890.1 புளிகளைப் பெற்று சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்தது. இதில் ருத்ராக்ஷ் பாட்டீல் 631.8, ஹிமான்சு தில்லான் 630.0, பார்த் மானே 628.3 புள்ளிகளைப் பெற்றனர்.
சீனாவில் ஷெங் லிஹாவோ, மா ஷிஹான், ஹாங் சங்கோங் ஆகியோர் மொத்தமாக 1899 புள்ளிகளைப் பெற்றனர். இது புதிய உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதனால், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
Asian Games 2026 Rudrankksh Balasaheb Patil Parth Rakesh Mane and Himanshu Dhillon win a silver medal in the Men’s 10m Air Rifle
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.