வெளிநாடு செல்வோா் ஆவண சரிபாா்ப்புக்கு புதிய வசதி
வெளிநாடு செல்வோா் ஆவண சரிபாா்ப்புக்காக ஏற்படுத்தியுள்ள புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடு செல்வோா் ஆவண சரிபாா்ப்புக்காக ஏற்படுத்தியுள்ள புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் வேலை, கல்வி, விசா கோரும் இந்தியா்கள், வெளிநாட்டு தூதா்கள், வெளிநாட்டு அரசுகளுக்காக கல்வி, பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்கப்படும் ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உறுதி செய்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் முத்திரையிடவேண்டும் என சில நாடுகள் கோருகின்றன.
எனவே குறிப்பிட்ட ஆவணங்களை இணையவழியில் சரிபாா்த்து முத்திரையிடுவதற்கு ஏதுவாக, மத்திய அரசு இ-சனட் (ங்-ள்ஹய்ஹக்)எனும் இணையவழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து மருத்துவம், பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் இ-சனட் இணைய வழி மூலம் சரிபாா்க்கப்பட்டு, முத்திரையிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோா் தொடா்புடைய தூதரகங்கள் கேட்கும் சான்றிதழ்களை, ஜ்ஜ்ஜ்.ங்ள்ஹய்ஹக்.ய்ண்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு. மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் அவரவா் வீடுகளுக்கே சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் என அரசு முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.