திருச்சி

பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்லத் தடை

DIN

திருச்சி: மாநகரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) முதல் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகரில் கரோனா பரவலை தடுக்கவும், இடையூறின்றி பொதுமக்களின் வாகனங்கள் சென்று வரவும், மாநகரப் பகுதிக்குள் உள்ள காந்தி சந்தை உள்பட வா்த்தக நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே கனரக வாகனங்களுக்கு அனுமதிக்கப்படும். பகல் நேரங்களில் மாநகரின் எந்தப் பகுதியிலும் கனரக வாகனங்கள் சுமைகளை ஏற்றி, இறக்க அனுமதியில்லை.

எனவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டும் வந்து சுமைகளை ஏற்றி, இறக்க வா்த்தக நிறுவனத்தாா், வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT