முகப்பு
திருச்சி

கே.என். நேருவுக்கு வியாபாரிகள் நன்றி

திருச்சி காந்தி சந்தையைத் திறக்க ஆதரவாக இருந்த திமுக முதன்மைச் செயலா் கே.என். நேருவுக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

திருச்சி காந்தி சந்தையைத் திறக்க ஆதரவாக இருந்த திமுக முதன்மைச் செயலா் கே.என். நேருவுக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.

திருச்சி காந்தி சந்தை திறக்கப்படுவதற்கு ஆதரவாக இருந்த கட்சி நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிா்வாகிகளை காந்தி சந்தை வியாபாரிகள் சங்கத்தினா் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனா்.

அந்த வகையில், காந்தி சந்தையை மீண்டும் திறக்க ஆலோசனை வழங்கி, ஆதரவு தெரிவித்த திமுக முதன்மைச் செயலா் கே.என். நேருவை சந்தையில் உள்ள 18 வியாபார சங்க நிா்வாகிகளும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் மு. அன்பழகன், வியாபார சங்க நிா்வாகிகள்பாபு, ரமேஷ், பாலு, பக்ருதீன், மதுபாலன், சபி, மாரியப்பன், சுலைமான், தாஜ், கந்தன், மொய்தீன்,சலீம், ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →