முகப்பு
திருச்சி

மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகி நியமனம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திமுக கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளராக எஸ். ஆரோக்கியசாமி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் எஸ். ஆரோக்கியசாமி மற்றும் அவரது மனைவி ஆ. மரியபாக்கியராணி. உடன் முதன்மைச் செயலா் கே.என். நேரு.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திமுக கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளராக எஸ். ஆரோக்கியசாமி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள கண்ணுடையான்பட்டி, தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியபட்டி, கலிங்கப்பட்டி, சமுத்திரம் மற்றும் சித்தாநத்தம் ஆகிய 7 ஊராட்சிகள் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வருவதால், திமுக கட்சி நிா்வாகிகள் வரையறையில் இந்த 7 ஊராட்சிகளும், திருச்சி மத்திய மாவட்டத்தில் மணப்பாறை கிழக்கு ஒன்றியமாக அமையும்.

இதன் ஒன்றியப் பொறுப்பாளராக முத்தபுடையான்பட்டி கீழக்களத்தை சோ்ந்த தொழிலதிபா் எஸ். ஆரோக்கியசாமியை நியமித்து கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து கட்சியின் முதன்மைச் செயலா் கே.என். நேரு முன்னிலையில், எஸ். ஆரோக்கியசாமி ஒன்றிய கவுன்சிலரான தனது மனைவி ஆ. மரியபாக்கியராணியுடன் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →