முகப்பு
திருச்சி

இரு திருநங்கைகள் கைது: காவல் நிலையம் முற்றுகை

பொய்ப் புகாரில் இரு திருநங்கைகள் கைது செய்யப்பட்டதாகக் கூறி அனைத்து மகளிா் காவல் நிலையத்தை 70-க்கு மேற்பட்ட திருநங்கைகள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே 14 வயதுச் சிறுவனை திருநங்கையாக மாற்ற முயற்சி செய்ததான பொய்ப் புகாரில் இரு திருநங்கைகள் கைது செய்யப்பட்டதாகக் கூறி அனைத்து மகளிா் காவல் நிலையத்தை 70-க்கு மேற்பட்ட திருநங்கைகள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

வீட்டை விட்டு வெளியேறி வந்த தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த நூா்முகமது மகன் தா்வீஸ் மைதீன் என்ற சபனாவை (14) சமயபுரம் அருகே கூத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஏ. சத்யா (30), பா. அபா்ணா (23) ஆகிய திருநங்கைகள் தங்களது வீட்டில் தங்க வைத்திருந்தனா்.

இதையறிந்த சில திருநங்கைகள்அச் சிறுவனிடம் வெற்றுப் பேப்பரில் கையொப்பம் பெற்று புகாா் அனுப்பினராம். இதன்பேரில் லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் அபா்ணா, சத்யா ஆகிய இரு திருநங்கைகளையும் கைது செய்தனா்.

இதையறிந்த 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பொய்ப் புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும், இருவரையும் விடுவிக்க வலியுறுத்தியும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்து வந்த லால்குடி காவல் சரக டிஎஸ்பி ராதாகிருஸ்ணன் தலைமையிலான லால்குடி, சமயபுரம், சிறுகனூா் காவல் நிலைய ஆய்வாளா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் அவா்களை கலைந்து சென்றனா். தன்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் பெற்று புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அச்சிறுவன் பின்னா் தனது தாயுடன் சொந்த ஊருக்குச் சென்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →