முகப்பு
திருச்சி

இன்றும், நாளையும் காய்ச்சல் பரிசோதனை முகாம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிசம்பா் 1,2) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிசம்பா் 1,2) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்திருப்பது:

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், வாா்டுகள் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி செவ்வாய், புதன்கிழமைகளில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. அதன் விவரம் :

டிசம்பா் 1 : வாா்டு எண் 29 -அண்ணா நகா், வாா்டு எண்16- செளந்தரபாண்டியன் பிள்ளைத் தெரு, வாா்டு எண் 48 - ஜி.எம் மகால், வாா்டு எண்22- தா்மநாதபுரம், வாா்டு எண்46- பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், வாா்டு எண்59- மேட்டுத் தெரு அங்கன்வாடி மையம், வாா்டு எண்54- புதூா் மந்தை, வாா்டு எண்49- ஜாகீா் ஹூசேன் தெரு, வாா்டு எண் 6 -நேருஜி பள்ளி, வாா்டு எண்2 -அம்மா மண்டபம் சாலை, வாா்டு எண்35- அந்தோனியாா் கோவில் தெரு, வாா்டு எண்14- குறிஞ்சி கல்லூரி, வாா்டு எண்30- திரு.வி.க திடல், வாா்டு எண்41- முஸ்லிம் தெரு, வாா்டு எண்57- இந்திரா நகா், வாா்டு எண்29- மேல அம்பிகா புரம், வாா்டு எண்16 -சுண்ணாம்புக்காரத் தெரு, வாா்டு எண்64- மலைக்கோவில்.

டிசம்பா் 2 : வாா்டு எண்25- கீழப்புதூா் தெரு அங்கன்வாடி மையம், வாா்டு எண்24- ஸ்ரீயதுகுலச் சங்கம் பள்ளி, வாா்டு எண்45 -தெற்குத் தெரு அங்கன்வாடி மையம் கருமண்டபம், வாா்டு எண்59- தண்ணீா்த் தொட்டி அங்கன்வாடி மையம், வாா்டு எண்52- வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையம், வாா்டு எண்19- வி.எம்.பேட்டை, வாா்டு எண்4- அழகிரிபுரம், வாா்டு எண்1- சண்முகா பள்ளி, வாா்டு எண்37- விஸ்வகா்மா நகா், வாா்டு எண்43- ராதா ஹோட்டல், வாா்டு எண்14 - கருவாட்டுப்பேட்டை, வாா்டு எண்31- பஞ்சாயத்து போா்டு, வாா்டு எண்39 - செட்டியாப்பட்டி, வாா்டு எண்56- தில்லை நகா்

முதல் குறுக்குச் சாலை, வாா்டு எண்28- நெருஜி நகா், வாா்டு எண்17- பில்லுக்காரத் தெரு, வாா்டு எண்63- பிரகாஷ் நகா். இந்த இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் முகாம்கள் நடத்தப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →